இலங்கையில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் நேற்று அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் கோவிட் தொற்றுக்குள்ளன நபர்கள் தொடர்பில் தொடர்ந்தும் ஆராய்ப்பட்டு வருவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் ஒருவர் வெளிநாட்டவராகும். அவர் இதுவரையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
மற்றைய நபர் இலங்கைக்கு வருகைத்தந்த ஒருவராகும். மூன்றாவது நபர் அவருடன் பழகியவராகும். இந்த நபர்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
நாங்கள் இது குறித்து ஆராய்ந்து வருகின்றோம். முதலில் கண்டுபிடிக்கப்பட்ட நோயாளி தனியாக கண்டுபிடிக்கப்பட்டவராகும். தற்போது மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 ஆகும்.
கடந்த நாட்களில் அடையாளம் காணப்பட்ட நோயாளியை தவிர்த்தால் புதிதாக 3 நோயாளர்கள் உள்ளனர். விமான நிலையத்தில் பெற்றுக் கொண்ட மாதிரிகளில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனினும் நாட்டில் எந்தெந்த இடங்களில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்பது குறித்து இன்னமும் எங்களுக்கு தெரியாது. வெளிநாட்டிற்கு சென்ற ஒமிக்ரோன் தொற்றாளர் நெருங்கி செயற்பட்ட பிரதேசத்தில் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு ஆய்வு செய்து வருகின்றனர்.
தகவல் கிடைத்தவுடன் தெரியப்படுத்துகின்றோம். எங்களுக்கு கிடைத்த மின்னஞ்சலில் இன்னமும் மேலதிக தகவல்கள் குறிப்பிடப்படவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.