சிறைச்சாலையில் உயிரிழந்த கைதி! விசாரணையில் வெளியாகிய தகவல்
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் , காவலர்களின் தாக்குதல் காரணமாக கைதியொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன..
மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஐஸ் போதைப் பொருள் தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த மாதம் 23ஆம் திகதி மஹரகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த குறித்த நபர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியல் உத்தரவுக்கு அமைவாக மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

திருகோணமலையில் Black Ops Unit' இயங்கிய இரகசிய சித்திரவதை முகாம்! அடைத்துவைக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் எங்கே?
சிறைச்சாலை அதிகாரிகள்
இந்நிலையில் கடந்த மாதம் 26ம் திகதி சந்தேக நபரிடம் ஐஸ் போதைப்பொருள் இருப்பதாக சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் அவரைச் சோதனையிட முயன்ற போது, சந்தேக நபர் தன்னிடம் மறைத்து வைத்திருந்த ஐஸ் போதைப் பொருள் பொதியை விழுங்கியுள்ளார்.
அதனையடுத்து சிறைச்சாலை காவலர்கள், சந்தேக நபரைக் கடுமையாக தாக்கியுள்ளதுடன், ஏனைய இரண்டு சிறைக்கைதிகளும் அந்தத் தாக்குதலில் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் அவர் விழுங்கிய ஐஸ் போதைப் பொருளை வாந்தி எடுக்க வைப்பதற்காக இரண்டு போத்தல் உப்புநீர் பலவந்தமாக பருக வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேக நபர் கடுமையான காயங்களுக்குள்ளான நிலையில் அதன் பின்னர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பின்னர் சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் அவரது பிரேத பரிசோதனை நடைபெற்றிருந்த நிலையில், சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்களை அடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் பொரளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... அதிருப்தியில் அரங்கம்! நடுவர்களின் முடிவு என்ன? Manithan
