கொழும்பில் இன்று மீட்கப்பட்ட குண்டு தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்
கொழும்பிலுள்ள பிரபல வைத்தியசாலை வளாகத்தில் இன்று மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கைக்குண்டின் பாதுகாப்பு ஆணி நீக்கப்பட்டு, எரியும் சுருள் வைத்து பின்னர் வெடித்து சிதறும் வகையில் குறித்த கைக்குண்டு தயாரிக்கப்பட்டிருந்ததாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் இதுவரையில் மூவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதற்கமைய வைத்தியசாலையில் பணியாற்றுவோர் , சம்பவத்தை நேரில் பார்த்த நபர் மற்றும் மற்றுமொருவரிடம் இதுவரையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இன்று பிற்பகல் இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த வைத்தியசாலையின் முதலாம் மாடியின் கழிப்பறையில் இருந்து அது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் அந்த இடத்திற்கு சென்ற பொலிஸார் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகள் பலர் அவ்விடத்திற்கு வருகைத்தந்துள்ளனர்.
பல பொலிஸ் குழுக்கள், வைத்தியசாலையின் சிசிடிவி காட்சிகள் மூலம் சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri