மோட்டார் போக்குவரத்து தொடர்பில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை
சேவைகளைப் பெறுவதற்கு திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் (29.02.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
முன்பதிவு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள எந்தவொரு மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்திலும் சேவைகளைப் பெறுவதற்கு திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதற்காக தொலைபேசி இலக்கமும் இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் 0112117116 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொண்டு தேவையான சேவைகளை தெரிவு செய்த பின்னர், தொலைபேசி இலக்கம் மற்றும் அடையாள இலக்கத்தை உள்ளிட்டு சேவைக்கான திகதி, நேரம், இடம் என்பன குறுஞ்செய்தியாகப் பெறப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |