பாம்பு கடிக்குள்ளான நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வெளியான தகவல்
திருகோணமலை - ஐந்தாம் கட்டை பகுதியைச் சேர்ந்த ஒருவர் பாம்புக் கடிக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர் தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது தன்னை பாம்பு கடித்ததாக கூறி கடித்த பாம்பையும் எடுத்துக்கொண்டு வைத்தியசாலைக்கு சென்று உடனடியாக சிகிச்சையளிக்குமாறு கூறியுள்ளார்.
இந்நிலையில், அவருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்ட பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் அனுமதிப்பதாக கடமையிலிருந்த வைத்தியர் கூறியதையடுத்து தனக்கு கோவிட் தொற்று இல்லையெனவும்,பரிசோதனை மேற்கொள்ள தேவை இல்லையெனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து, குறித்த நபருக்கு கட்டாயப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் திருகோணமலை, ஐந்தாம் கட்டை சுனாமி வீட்டுத்திட்டத்தில் வசித்து வரும் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் 55 வயதுடைய நபரெனவும் தெரியவந்துள்ளது.
இதற்கமைய,பாம்பு கடிக்கு உள்ளானவருக்கு தனி அறையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதுடன், சிகிச்சை முடிவடைந்த பின்னர் கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் வைத்தியசாலையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri
