போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் கைது செய்யப்பட்டோர் தொடர்பில் வெளியான தகவல்
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 36 ஆயிரத்து 67 பேர் கைதுசெய்யப்பட்டனர் என கலால் வரி திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கபில குமாரசிங்க (Kapila Kumarasinghe) தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்ததாவது,
சட்டவிரோதமான முறையில் ஸ்பிரிட் உற்பத்தி செய்தமை அதனை வைத்திருந்தமை மற்றும் கொண்டு சென்றமை தொடர்பில் 18 ஆயிரத்து 572 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 2 ஆயிரத்து 296 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்றும், குறித்தச் சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்தப் பெறுமதி 40 கோடி ரூபா என்றும் தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ததன் பின்னர்
11 கோடி 60 இலட்சம் ரூபா தண்டப்பணம் அறிவிடப்பட்டுள்ளது என்றும் கலால் வரி
திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் இதன்போது தெரிவித்துள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 12 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan