வைப்பிலிடப்படும் பணம் குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்ட தகவல்
காரணங்கள் எதுவுமின்றி ஒருவரின் கணக்கிற்கு பணம் வைப்புச் செய்ய முடியாது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பணம் வைப்பிலிடப்படும் போது அது குறித்து மத்திய வங்கி விசாரணை செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
அந்நிய செலாவணி எமக்கு கிடைக்கும் முக்கியமான காரணிகளில் ஒன்றாக வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்புவது காணப்படுகின்றது.
7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஓர் ஆண்டில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.
கடந்த மாதம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் வெளிநாட்டு நாணயத்தின் அளவு 300 மில்லியன் டொலர்களினால் குறைவடைந்ததனை அவதானித்தோம். வேறும் வழிகளில் பணம் அனுப்பி வைக்கப்படுவதனால் இவ்வாறு பணம் அனுப்பி வைப்பு குறைந்துள்ளது.
நாணய மாற்றுப்பெறுமதி ஒரு டொலருக்கு 200 ரூபாவாக காணப்படும் போது 240 ரூபா கொடுக்கப்படுவதாகவே தென்படுகின்றது.
300 மில்லியன் டொலர் என்றால் இலங்கையில் 72 பில்லியன் ரூபா பணம் விநியோகிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு விநியோகம் செய்ய பணம் எங்கிருந்து கிடைத்தது.
இதில் அதிகளவான தொகை போதைப் பொருள் வர்த்தகத்தின் ஊடாகவும் இருக்கலாம்.
எந்தவொரு காரணமும் இன்றி ஒருவர் இன்னொருவரின் கணக்கிற்கு பணம் வைப்புச் செய்தால் நிதிச் சலவை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.
அவ்வாறான கணக்குகளை முடக்குவதற்கும் முடியும் என அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri