கோவிட் தொற்றுடன் உயிரிழப்பவர்கள் குறித்து வெளியான தகவல்
கோவிட் தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நோயால் இறக்கும் பெரும்பாலானோர், முழுமையாக தடுப்பூசி செலுத்தப்படாதவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது கவனிக்கப்பட்டுள்ளதாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
"60 அகவைக்கும் மேற்பட்ட ஒவ்வொருவரும் விருப்பமான தடுப்பூசியைப் பொருட்படுத்தாமல் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வது முக்கியமானது.
அதிலும் 30 அகவைக்கு மேற்பட்டவர்கள், தயக்கமின்றி தடுப்பூசி பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நாடு இன்னும் மூன்றாவது கோவிட் அலைகளில் உள்ளது. அதேநேரம் இலங்கையில் இதுவரை மொத்தம் 68 டெல்டா தொற்றாள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் சந்தேகத்திற்கிடமான அனைத்து மாதிரிகளையும் தாம் ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனைக்கு அனுப்புவதாக அசேல குணவர்தன தெரிவித்தார்.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
