நெடுந்தூரப் பேருந்துகள் தொடர்பில் புதிய நடைமுறை
நெடுந்தூரப் பேருந்துகள்(Long-Distance Buses) தேநீர் அருந்த நிறுத்தும் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில், உணவு மற்றும் பானங்கள் அறிவிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால், பொதுமக்கள் உடனடியாக முறைப்பாடு அளிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) வலியுறுத்தியுள்ளது.
அதிக விலைக்கு விற்பது குறித்து பொதுமக்களின் முறைப்பாடுகளையடுத்து, அதிகாரசபை 1977 என்ற இலக்கத்துக்கு முறைப்பாடுகள் குறித்து அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெந்தலுவ - பறக்கடுவ பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவது குறித்து முறைப்பாடு கிடைத்ததைத் தொடர்ந்து, இரத்தினபுரி மாவட்ட அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
சட்ட நடவடிக்கை
குறித்த உணவக உரிமையாளர் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவருக்கு ரூபா 100,000 தண்டம் விதிக்கப்பட்டது.
அதிக விலைக்கு விற்பனை செய்யும் உணவகங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை எச்சரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விமானத்தில் கலாட்டா செய்த பிரித்தானியரை காதைப் பிடித்து இழுத்துச் சென்ற பிரான்ஸ் பொலிசார்: ஒரு வைரல் வீடியோ News Lankasri

தலைவனா அவன், முட்டாள்... தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சித்த பிரபல இயக்குனர் Cineulagam
