இலங்கையில் வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்
நாட்டில் டொலர் கையிருப்பு அதிகரித்துள்ள நிலையில், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதிகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுனர் மற்றும் நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இதுவரை வாகன இறக்குமதி செய்வதற்கான அனுமதி கிடைக்கவில்லையெனவும் குலதுங்க குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதிக்கான தடை இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் தளர்த்தப்படும் என வாகன இறக்குமதியாளர்கள் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மூன்று வருடங்களாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாமையால் பாவனையாளர்களும் வாகன இறக்குமதியாளர்களும் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan