நம்பிக்கையில்லா தீர்மானம்! அரச உயர்பீடத்திலிருந்து சென்ற தகவல்
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க அரசாங்கத்திலுள்ள பிரதான கட்சிகள் தீர்மானித்துள்ளன.
கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் ஆளுங்கட்சியிலுள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு இன்று மாலை 05 மணியளவில் அவசர அழைப்பொன்று அரச உயர்பீடத்திலிருந்து சென்றுள்ளது.
இதனையடுத்தே நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க அரசாங்கத்திலுள்ள பிரதான கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் இலங்கையில் எரிபொருள் விலையேற்றம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு ஆளும் தரப்புக்குள்ளேயே கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன.
இவ்வாறான பின்னணியில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri