இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் அபாய சங்கு ஊதுகிறார் அமைச்சர்
அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால், நாட்டின் கடன் வழங்கும் நாடுகளும், நிறுவனங்களும் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிக்காது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் தனது வருமானத்தை நிர்வகிப்பதற்கான முறையை பின்பற்றும் என்ற உத்தரவாதம் கடனளிப்பவர்களுக்கு தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

தனிமைப்படுத்தப்படும் இலங்கை
இந்த நேரத்தில் அல்லது அது தொடர்பான மாற்றங்களைச் செய்யாவிட்டால், 2022 இல் ஏற்பட்ட நெருக்கடியை விடவும் எதிர்காலத்தில் நாம் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அது மிகவும் பாரதூரமான சூழ்நிலையாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அப்போது உலகில் எந்த ஒரு நாட்டின் ஆதரவின்றி இலங்கை தனிமைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே, வருமான வரிச்சட்டம் உள்ளிட்ட புதிய திருத்தங்களுக்கு ஆதரவு அளிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri