யாழில் அதிபர் இடமாற்றம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
யாழ். வலயத்தில் ஆசிரியர்கள், அதிபர்கள் நியமனத்தின்போதும் இதுவரை வெளி மாவட்டம் செல்லாத 47 அதிபர்கள் யாழ். மாவட்டத்திலேயே தொடர்ந்தும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் தீவகம் தவிர்ந்த யாழ். வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் ஆகிய வலயங்களிலே இவ்வாறு அதிபர்கள் கடமையாற்றுகின்றனர்.
இவ்வாறான நிலையில் தற்போது முதற்கட்டமாக 27 அதிபர்களுக்கு வெளி மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்படவுள்ள நிலையில் 27 பேரும் மேல்முறையீடு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இவ்வளவு காலமும் அரசியல் செல்வாக்கு, அதிகாரிகளின் செல்வாக்கு என்பவற்றை பயன்படுத்தி யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறாத குறித்த 47 பேரும் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரண் கருத்து தெரிவிக்கையில், ”தாம் அதிபர் இடமாற்றத்தில் உறுதியாக இருப்பதாகவும் சரியான
மருத்துவ அறிக்கை வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் பரிசீலிக்கப்படும்” என அவர்
மேலும் தெரிவித்துள்ளார்.



