மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்
நாடாளவிய ரீதியில் இன்று விசேட அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதிலும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் செயற்பாடுகள் வழமை போன்று செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர ஆகிய அலுவலகங்களின் சேவைகள் இன்றைய தினம் வழமை போன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இன்றைய தினத்திற்கான நேரத்தை முன்பதிவு செய்து கொண்டவர்களுக்கான சேவைகள் மாத்திரம் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், குருநாகல், கம்பஹா, அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை அலுவலகங்களில் இன்றைய தினத்திற்கான நேரத்தை முன்பதிவு செய்து கொண்டவர்களுக்கான சேவைகள் இடம்பெறும் எனவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam