இலங்கையை முழுமையாக முடக்குவது தொடர்பில் விசேட வைத்தியர் வெளியிட்ட தகவல்
இலங்கையில் ஆபத்தான புதிய கோவிட் வைரஸ் பரவுவது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக விசேட வைத்தியர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையில் விசேட நிபுணர்களின் கருத்திற்கமையவே நாட்டை மூடுவது தொடர்பில் தீர்மானங்கள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய நிலைமைக்கு எப்படி முகம் கொடுப்பது என்பது தொடர்பில் தினமும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பிரித்தானிய மரபணு மாறிய வைரஸிற்கும் இந்த தடுப்பூசியே உதவும் என்பதே சுகாதார பிரிவின் கருத்தாகும்.
தொடர்ந்து இந்த வைரஸ் பிரச்சினையாக இருந்தால் நாங்கள் வேறு நடவடிக்கைக்கு செல்ல வேண்டும்.
தற்போது நாட்டை சாதாரண முறையில் நடத்தி செல்லும் நிலையில் நோயாளிகளை தனியாக வைக்க மாத்திரமே முடியும்.
நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதற்காக நாட்டை மூடி வைக்க முடியாது. விசேட நிபுணர்களின் தீர்மானத்திற்கமையவே நாங்கள் தீர்மானங்கள் மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.