சர்வதேச இறையாண்மை பத்திரங்களை வைத்திருப்பவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையின் சர்வதேச இறையாண்மை பத்திரங்களை வைத்திருப்பவர்கள் நாட்டின் கடன் மறுசீரமைப்பு மற்றும் முதிர்வு நீடிப்பு ஆகியவற்றில் 20 சதவீத முக்கிய முடிவில் பங்கு வகிக்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வார ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் 3 பில்லியன் டொலர் திட்டத்தில் இறுதி கையெழுத்திட்டதை அடுத்து, இலங்கையின் 13.4 பில்லியன் டொலர் இறையாண்மை டொலர் பத்திரங்களை மறுகட்டமைப்பதில் முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது.
இந்த நிலையில் குறித்த சர்வதேச இறையாண்மை பத்திரங்களை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் ஆறு வருட முதிர்வு நீடிப்பு மற்றும் 15 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரையிலான மறுசீரமைப்புக்கு இணங்கலாம் என்றும் ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் மறுசீரமைப்பு
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் மறுசீரமைப்புக்கு பின்னர் குறிப்பிட்ட உள்நாட்டு கடன்களும் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் ரொய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Parliament Live

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
