திரிபோஷ கையிருப்பு தொடர்பில் சுகாதார பரிசோதகர் சங்கம் வெளியிட்ட தகவல்
நச்சுத்தன்மை கொண்ட திரிபோஷ கையிருப்பு தொடர்பில் உபுல் ரோஹன தெரிவித்த கருத்து சரியானது என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் எம்.என்.எச்.நிஹால் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் வைத்து நேற்றுமுன் தினம் (22.09.2022) இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் திரிபோஷ பங்குகளில் உபுல் ரோஹன கூறியதை விட அதிகமான அஃப்லாடாக்சின் இருக்கின்றது.
திரிபோஷ தொடர்பில் வெளியான தகவல்
விநியோகிக்கப்பட்ட திரிபோஷ மனித பாவனைக்கு உகந்ததல்ல. இது தொடர்பில் எமது தொழிற்சங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அறிக்கை
இந்த நிலையில் பொறுப்புள்ள தொழிற்சங்கமான நாம் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதில்லை.
மேலும் தாம் முன்வைத்த அனைத்து அறிக்கைகளும் ஆதாரங்களின் அடிப்படையில்
அமைந்தவை என தெரிவித்துள்ளார்.
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam