66 வருடங்களில் 45 எம்.பிக்கள் படுகொலை
இலங்கையில் கடந்த 66 வருடங்களில் 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
1956 முதல் 2022 வரையான காலப்பகுதியிலேயே இக்கொலைகள் இடம்பெற்றுள்ளன என்று நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் அவர் தகவல் வெளியிட்டார்.
19 மாதங்களுக்கு ஒரு கொலை

பிரதமராக இருந்த எஸ்.டப்ளியூ. ஆர்.டி பண்டாரநாயக்கவின் கொலையே முதலாவது படுகொலையாகும். இறுதியாக அமரகீர்த்தி அத்துகோரல கொலை செய்யப்பட்டார்.
ஜனாதிபதி பதவியை வகித்த ஒருவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்த ஒருவரும் எமது நாட்டில் கொல்லப்பட்டுள்ளனர்.
அதாவது 19 மாதங்களுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இக்கொலைகள்
இடம்பெற்றுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan