கனடா செல்ல காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல் (Video)
கனடாவில் கடும் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 2025ஆம் ஆண்டிற்குள் ஐந்து இலட்சம் புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்க அந்த நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதற்கான இலக்குகளை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு குடிவரவு அமைச்சர் சீன் ஃப்ரேசர் தெரிவித்துள்ளார்.
புதிய நிரந்தர குடியிருப்பாளர்கள்
அந்த வகையில் 2023ஆம் ஆண்டு நான்கு இலட்சத்து 65 ஆயிரம் புதிய நிரந்த குடியிருப்பாளர்களை வரவேற்க கனடா திட்டமிட்டுள்ளது.
இது முந்தைய இலக்கை விட 4 வீத அதிகரிப்பாகும். அத்துடன் 2024ஆம் ஆண்டு நான்கு இலட்சத்து 85 ஆயிரம் புதிய குடியிருப்பாளர்களை வரவேற்க திட்டமிட்டுள்ளதாகவும் இது 7.5 வீத அதிகரிப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டியள்ளார்.
இந்த ஆண்டு குடிவரவு திட்டங்கள் வணிக நடவடிக்கைகளுக்கு தேவையான தொழிலாளர்களை கண்டறிய உதவும் என சீன் ஃப்ரேசர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய இலக்கை அடைய சொந்த நாடுகளில் வன்முறை மற்றும் போரில் இருந்து தப்பி வருவோருக்கு உதவுவதற்கான கடப்பாடுகளை நிறைவேற்ற கனடா அனுமதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அகதிகளின் எண்ணிக்கையை குறைக்க திட்டம்
மேலும் இதன்மூலம் கனடா அரசாங்கத்தின் உதவி பெறும் அகதிகளின் எண்ணிக்கையை 3இல் ஒரு பங்காக குறைக்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையை 2023இல் 23,550இல் இருந்து 2025ஆம் ஆண்டிற்குள் 15,250ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடியேற்றத்தை கடுமையாக ஆதரித்துள்ளார்.
கனடாவில் தற்போது கடும் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு மில்லியன் வேலை இல்லாதவர்கள் இருந்ததாகவும் அண்மையில் வெிளயிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
மேலும், புதிய இலக்குகள் 2023 மற்றும் 2025இற்கு இடையில் பொருளாதார புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையில் சுமார் 13 வீதம் அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.