கனடாவில் யாழ். தமிழர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்
கனடாவில் வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ட்ரக் வண்டி சாரதிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 21 வயதான ஆண் ஒருவரும் 23 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்கம் வீதி மற்றும் எல்சன் தெருவில் மூன்று பயணிகளுடன் பயணித்த கார் ஒன்றின் மீது டிரக் வண்டி மோதி விபத்துக்குள்ளாகியிருந்தது. இதில் 21 வயதான மகனும், 23 வயதான மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சாரதிக்கு எதிராக குற்றச்சாட்டு
52 வயதான தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ட்ரக் வண்டி சாரதியான 46 வயதான ஆண்டனி பாக்லியேரிக்கு எதிராக மரணம் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் யோர்க் பிராந்திய பொலிஸாரால் முன்வைக்கப்பட்டது.
இதன்படி, எதிர்வரும் 29ம் திகதி காலை, 9:30 மணிக்கு ட்ரக் வண்டி சாரதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்து தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புகொள்ளுமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 10 மணி நேரம் முன்

என்னா மேடம் பேச்சு வரலையா? தெனாவட்டுடன் சுற்றும் ராதிகாவிற்கு நச் என பதிலடி கொடுத்த பாக்கியா Manithan

ராகு பெயர்ச்சியால் சனி பகவானின் கட்டுக்குள் சிக்கப் போகும் ராசிக்காரர்கள்! இன்றைய ராசிப்பலன் Manithan

லண்டனில் இலங்கையரை சுத்தியலால் அடித்துக்கொன்றவர் இவர்தான்... வெளியாகியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
