வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கான முக்கிய தகவல்!
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருவோர் தொடர்பான கட்டுப்பாடுகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கைக்கு வருகைத்தரக் கூடிய இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட பயணிகளின் எண்ணிக்கை தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு சிவில் விமான சேவை அதிகாரசபையினால் நீக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்று 14 நாட்கள் கடந்திருக்க வேண்டும் என்பதுடன், அதனை உறுதிப்படுத்தக்கூடிய சான்றிதழ் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
அத்துடன், தடுப்பூசியின் ஒரு டோஸ் மட்டும் பெற்றுக் கொண்ட அல்லது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பயணிகளை அழைத்து வரும் விமானத்தில் 75 பேர் மாத்திரமே இருக்க வேண்டும். அவர்கள் இலங்கைக்கு வருகை தந்த பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri