ஜப்பான் தொடர்பில் வீரவங்ச வெளியிட்ட தகவல்
ஜப்பானியர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் போது உலகில் இரண்டு நாடுகளிடம் விசா அனுமதியை பெற வேண்டும் எனவும் அதில் ஒரு நாடு இலங்கை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஜப்பானியர்கள் வடகொரியாவுக்கு செல்ல மாட்டார்கள்

ஜப்பானியர்கள் பயணம் மேற்கொள்வதற்காக விசா பெற வேண்டிய மற்றைய நாடு வடகொரியா. ஜப்பானியர்கள் வடகொரியாகவுக்கு செல்ல போவதில்லை, ஆனால் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வார்கள். சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது குறித்து நாம் தற்போது பேசி வருகின்றோம்.
இப்படியான நேரத்தில் ஜப்பானியர்கள் இலங்கைக்கு பயணம் செய்யும் போது விசா பெற வேண்டும் என்ற நடைமுறையை ஏன் எம்மால் மாற்ற முடியாது?. ஜப்பானியர்கள் இலங்கை வரும் போது விசா பெற வேண்டும் என்ற நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டும்.

கடனை வாங்கி, சாப்பிட்டு சுகபோகமாக வாழும் நடைமுறை காரணமாக நாடு தற்போது வங்குரோத்து அடைந்துள்ளது எனவும் விமல் வீரவங்ச மேலும் கூறியுள்ளார்.
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam