இறுதி யுத்தத்தின் போது விடுதலைப்புலிகளின் தலைவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு! சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்
இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடைவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டபோதும், தன்மான பிடிவாதத்துடன் அதனை நிராகரித்து இறுதி வரை போரிட்டு உயிரிழக்க தீர்மானித்தார் என முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று (21) திகதி நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
வடக்கில் மீண்டும் யுத்தம்
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரை உயிருடன் கைது செய்திருந்தால் வடக்கில் மீண்டும் யுத்தம் ஆரம்பமாகியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது ஆனையிறவில் சுமார் 12,000 இராணுவத்தினர் நிலைகொண்டிருந்தபோது, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சுமார் 2,000 பேர் தாக்குதல் நடத்தி அந்த பகுதியை கைப்பற்றியிருந்தனர்.
இதனையடுத்து இராணுவத்தினர் பின்வாங்கிய சம்பவமும் இடம்பெற்றிருந்தது. இத்தகைய சம்பவங்களின் பின்னர் நாம் யுத்தத்தை முன்னெடுத்த விதம் அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.
வடக்கு, கிழக்கு யுத்தப் பிரதேசத்தையும் எனது பொறுப்பில் எடுத்துக்கொண்டு, அந்தப் பிரதேசம் முழுவதையும் வெற்றிகொள்ளக்கூடிய திட்டமொன்று உருவாக்கப்பட்டு இறுதியில் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
சுற்றிவளைக்கப்பட்ட பிரதேசம்
யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் சுமார் 10 கிலோமீற்றர் அளவிலான பிரதேசத்துக்குள் சுற்றிவளைக்கப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி இரண்டு நாட்களுக்கு யுத்த நிறுத்தமொன்றை அறிவிக்க தீர்மானித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர்களுடன் சரணடைவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சரணடைந்தால் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
எனினும், விடுதலைப்புலிகளின் தலைவர் அந்த யோசனைக்கு இணங்கவில்லை. அவர் தனக்கென ஒரு தன்மானப் பிடிவாதத்தைக் கொண்டிருந்தார்.
சரணடைந்து உயிர்வாழ்வதை விட இறுதிவரை போரிட்டு உயிரிழப்பதே சிறந்தது என்ற நிலைப்பாட்டில் அவர் இருந்தமையினால் சரணடைவதற்கான யோசனையை அவர் நிராகரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் தவறான கணிப்பு மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கலாம் - பிரித்தானிய உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri