சட்ட மா அதிபரின் புதிய வெளிப்படை : வெளியான தகவல்
பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுவிக்க பரிந்துரைக்கும் முடிவுகளுக்கான காரணங்களை, வெளியிட சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதுவரை, காலமும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுவிக்க பரிந்துரைத்த போதெல்லாம், "சந்தேக நபரை விடுவிக்க முடியும்" என்று கூறும் கடிதங்களை மட்டுமே திணைக்களம் வெளியிட்டு வருகிறது.
எனினும், சந்தேக நபர்கள் ஏன் விடுவிக்கப்படுகிறார்கள் என்பதற்கான காரணங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை.
சந்தேக நபர்களை விடுவிக்க..
சட்டமா அதிபர் திணைக்களம், அதன் முடிவுக்கான காரணங்களை வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை என்ற அடிப்படையிலேயே, காரணங்கள் வழங்கப்படாத நடைமுறை இருந்து வந்தது.
இருப்பினும், கொல்லப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் ஓட்டுநர் கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுவிக்க தனது திணைக்களம் பரிந்துரைத்ததால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, சந்தேக நபர்களை விடுவிப்பதற்கான காரணங்களை கோடிட்டுக் காட்ட சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி, சந்தேக நபர்கள் ஏன் விடுவிக்கப்படுகிறார்கள் என்பதை அறியக் கோரும் தொடர்புடைய தரப்பினருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் இனி காரணங்களை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |