வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் 14 ஆயிரத்து 152 பேர் தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் நிலை பராமரிப்பு சேவையின் பணிப்பாளர் அவந்தி கருணாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இதுவரையான காலப்பகுதிக்குள் 36 ஆயிரத்து 220 பேர் வீட்டு தனிமைப்படுத்தல் மூலம் குணமாகியுள்ளதாகவும் அவந்தி கருணாரத்ண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தகவல் அளித்த அவர் ,இலங்கையின் மேல் மாகாணத்திலேயே 68 வீதமானோர் வீட்டுத்தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக குறிப்பிட்டார்.
இதேவேளை வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 36 ஆயிரத்து 220 பேரில் 435 பேர் 14 நாட்களுக்குள் வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டு குணமடைந்ததாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் வீட்டுத் தனிமைக்கு உட்படுத்தப்படவுள்ளவர்கள் 1390 அவசர தொலைப்பேசி இலக்கத்துக்கு அழைத்து தம்மை பதிவு செய்துக்கொள்ளுமாறு அவந்திகருணாரத்ண தெரிவித்தார்.



