இலங்கையிலுள்ள பழங்குடிகள் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையின் (Sri Lanka) ஆரம்பகால மக்கள் என்று நம்பப்படும் வேடுவ மக்கள் இந்தியாவின் (india) ஐந்து பழங்குடி மக்களுடன் நெருங்கிய மரபணு பிணைப்புகளை கொண்டிருக்கிறார்கள் என்று புதிய ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது,
ஒடிசாவில் உள்ள ஒஸ்திரேசிய முண்டா பேசும் சந்தால் மற்றும் ஜுவாங் பழங்குடியினருடனும் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இருளர், பணியா மற்றும் பள்ளர் போன்ற திராவிட மொழி பேசும் பழங்குடியினருடனும் இலங்கையின் வேடுவர் இனத்தினர் வலுவான மரபணு ஒற்றுமையை கொண்டிருப்பதாக இந்திய மற்றும் இலங்கை விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது.
நேரடி சந்ததியினர்
இலங்கையின் சிங்கள அல்லது தமிழ் மக்களை விட, இந்த ஐந்து பழங்குடியினருடன் இலங்கையின் வேட்டுவ இனத்தவருக்கு அதிக மரபணு ஒற்றுமை உள்ளது என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்களவர்களும் தமிழர்களும் மரபணு ரீதியாக வேறுபடுத்த முடியாதவர்கள் ஆனால் வேதாக்கள் பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மிகக் குறைந்த கலவையால் தங்கள் அடையாளத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளனர் என்று ஆராய்ச்சியாளர் சௌபே தெரிவித்துள்ளார்.
தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள், நவீன மனிதர்கள் கடந்த 30,000 ஆண்டுகளாக இலங்கையை ஆக்கிரமித்துள்ளனர் என்று காட்டுகின்றன. வேட்டையாடுபவர்களே தீவின் ஒரே பழங்குடி மக்கள் மற்றும் தீவின் ஆரம்பகால குடிமக்களின் நேரடி சந்ததியினர் என்றும் நம்பப்படுகிறது.
மரபணுப் பிரிவு
தங்கள் ஆய்வுக்காக, விஞ்ஞானிகள் 37 ஆரோக்கியமான தாய்வழி தொடர்பில்லாத வேடுவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட இரத்த மாதிரிகளிலிருந்து மரபணுப் பொருளைப் பிரித்தெடுத்து, அவர்களின் மரபணுப் பிரிவுகளை மற்ற மக்கள் தொகையுடன் ஒப்பிட்டுள்ளனர்.
இதன்படி வேடுவர்கள், சுமார் 55,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து வந்த மக்களின் வழித்தோன்றல்கள் என்றும் ஆபிரிக்காவிலிருந்து இந்தியா மற்றும் ஆசியாவிற்குச் சென்ற நவீன மனிதர்களின் ஒரு கிளையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மேலும், ஆய்வுகளின்படி கி.பி 800 முதல் 600 வரையான
காலப்பகுதியில் இலங்கைக்கு சிங்கள மக்கள் வந்துள்ளதுடன் தமிழ் மக்கள் கி.மு 600 முதல் கி.மு 300 வரையான காலப்பகுதியில்
தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களின் வழித்தோன்றல்களாக உள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |