பேராசிரியர் ரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் குறித்து வெளியான தகவல்

Jaffna University of Jaffna Sri Lanka Death
By Theepan Feb 19, 2023 11:01 AM GMT
Report

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கணிதத்துறை பேராசிரியருமான ரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் குறித்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மறு தினமான (21.02.2023), செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணிக்கு இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளது.

கோண்டாவில் வடக்கிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது பூதவுடல், நாளை மறுதினம் (21.02.2023) காலை 7:30 மணிக்கு அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, பல்கலைக்கழகத்தில் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.

பேராசிரியர் ரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் குறித்து வெளியான தகவல் | Information About The Funeral

இறுதிக் கிரியைகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து, முற்பகல் 9:30 மணிக்குப் பூதவுடல் மீண்டும் அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு முற்பகல் 10:30 மணிக்கு இறுதிக் கிரியைகள் நடத்தப்பட்ட பின்னர் தகனக் கிரியைகளுக்காக இனுவில் கிழக்கு, காரைக்கால் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துணைவேந்தராகக் கடமையாற்றிய காலத்தில் பேராசிரியர் விக்கினேஸ்வரன் 'தமிழமுதம்' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டமைக்காகவும், பல்கலைக்கழகத்தினுள் நினைவுத் தூபி அமைக்கப்படுவதைத் தடுக்கத் தவறியமை தொடர்பிலும் இராணுவப் புலனாய்வு பிரிவினரின் அறிக்கையின் பேரில் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மாணவர்களால் பல்கலைக்கழக வளாகத்தினுள் மாவீரர் தினம், தியாகி திலீபன், அன்னை பூபதி, பொன். சிவகுமாரன் முதலானோரின் நினைவுத் தினங்கள் அனுஷ்டிக்கப்படுவது வழமையாகும். அத்தகைய நிகழ்வுகள் அனைத்திலும் பல்கலைக்கழக துணைவேந்தராகப் பதவியில் இருக்கும்போது பங்குபற்றிய ஒரே ஒரு துணைவேந்தர் என்று மாணவர்களால் மதிக்கப்பட்டவர் பேராசிரியர் விக்னேஸ்வரன்.

பேராசிரியர் ரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் குறித்து வெளியான தகவல் | Information About The Funeral

தமிழமுத விழா

சகலரும் அஞ்சும் பொங்கு தமிழ் பிரகடனத் தூபியை மீளமைக்க மாணவர்களால் எடுக்கப்பட்ட முயற்சிக்குத் தடை ஏற்படுத்தாது, தமிழமுத விழா தினத்தில் தானே அதனைத் திறந்தும் வைத்தார். பல்கலைக் கழகத்தினுள் இருக்கும் மாவீரர் தூபியும் இவரது காலத்தில் புனரமைப்புச் செய்யப்பட்டது.

துணைவேந்தர் அலுவலகத்திற்குப் பின் புறமாக அமைக்கப்பட்டு, பின்னர் உடைத்து, திருப்பிக் கட்டப்பட்ட முள்ளிவாய்கால் தூபி பல்கலைக்கழகத்தின் மத்தியில் உள்ள வேறொரு இடத்தில் அத்திவாரம் வெட்டி ஆரம்பிக்கப்பட்டது.

எனினும். அவ்விடத்தில் கட்டுவதற்குப் பல்கலைக்கழகத்தின் அடுத்த மட்டத்தில் உள்ளவர்கள் மத்தியில் எதிர்ப்பு வந்ததனால், தற்போது தூபி உள்ள இடத்தில் கட்டுவதற்குத் துணைவேந்தரின் உளரீதியான ஆதரவு இருந்தமையே தமது வெற்றிக்குக் காரணம் என்று அன்றைய காலத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொறுப்பு வாய்ந்த பதவியிலிருந்த முன்னாள் மாணவன் ஒருவர் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பிலான பதிவில் அவர் மேலும் குறிப்பிடுகையில், மீண்டும் புதிய இடத்தில் முள்ளி வாய்க்கால் நினைவுத்தூபிக்கு அத்திவாரம் வெட்டிக் கட்டப்பட்டுக் கொண்டிருந்தபோது அன்றைய உயர் கல்வி அமைச்சரும், இன்றைய நீதி அமைச்சருமான வியஜதாச ராஜபக்சவிடமிருந்து இருந்து காட்டமான கடிதம் துணைவேந்தருக்கு வந்தது.

உடனடியாக அந்தத் தூபியின் கட்டுமானத்தை நிறுத்தும்படி. நாமும் சூழ்நிலையைப் புரிந்து நிதானமாகச் செயற்பட்டதால் அன்று அதனை அமைதியாக விட்டோம் பின்னர் படிப்படியாகச் சில வேலைகளைச் செய்து முழுமையாக்க முன் இடிக்கப்பட்டது.

இடிக்கப்பட்டதாலேயே அது இன்று பிரமாண்டமாகக் கட்டப்பட்டது. அதிகாரத்தில் உள்ளவர் ஒரு தமிழ்த்தேசிய வாதியாக இருக்கும்போது எமது சிந்தனைகளைச் செயல்படுத்துவது இலகுவானது. இடை நடுவில் துணைவேந்தர் பதவிக்காலம் முடிய முன்னர் பதவி பறிக்கப்பட்ட பின் அவரைக் கௌரவிக்கும் முகமாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அடுத்த தமிழமுதத்தின் பிரதம விருந்தினராக அழைத்துக் கௌரவித்திருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US