ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்பில் வெளியான தகவல்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தனது நிறுவனத்தின் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவுறுத்தலை விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடுத்துள்ளார்.
அவர் குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
510 மில்லியன் அமெரிக்க டொலர்
தேசிய விமான சேவை வழங்கும் 510 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை உள்வாங்குவதன் மூலம் அரசாங்கம் தேவையான உதவிகளை வழங்கியுள்ளதால் முன்னேற்றம் காட்டப்பட வேண்டுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அடுத்த ஆறு மாதங்களில் செயற்பாட்டு மற்றும் நிதி முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அண்மைக்காலமாக கடுமையான விமர்சனங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றமை மற்றும் அதன் செயற்பாட்டுச் சிக்கல்கள் என்பன பயணிகளுக்கு ஏற்பட்ட கடும் அசௌகரியங்கள் காரணமாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam