கனடாவில் மாயமான விமானம் குறித்து வெளியான தகவல்
கனடாவில் வடக்கு ஒன்ராறியோவில் இரண்டு பேருடன் கடந்த மாதம் மாயமான சிறிய விமானத்தின் சிதைவுகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு மாயமான சிறிய விமானத்தின் சிதைவுகள் லேக் சுப்பீரியர் மாகாண பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் ஒன்ராறியோ பிராந்திய பொலிஸார் கருத்து தெரிவிக்கையில்,
கனடாவி மாயமான விமானம் தொடர்பில் தங்களின் ஹெலிகொப்டர் ஒன்றும், பொதுமக்கள் பயன்படுத்தும் ஹெலிகொப்டர் ஒன்றும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் குறித்த சிதைவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், அந்த விமானத்தில் பயணம் செய்த இருவரது சடலங்களும் (John Fehr மற்றும் Brian Slingerland) மீட்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஆல்பர்ட்டா பகுதியில் வசிக்கும் இருவரது குடும்பத்தினருக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விமானமானது ஏப்ரல் 14ம் திகதி ஒன்ராறியோவின் டெல்லி நகரிலிருந்து மராத்தான் பகுதிக்கு சென்றதாகவும் ரெட் ராக் ஏரிக்கு அருகில் ரேடாரில் இருந்து காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri