ராஜபக்சர்களுக்கு மிகவும் நெருக்கமான மகிந்த தொடர்பில் வெளியான பல அதிர்ச்சித் தகவல்
ஐஸ் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மகிந்த கஹந்தகமகே தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய உறவினரான மகிந்த கஹந்தகமகே 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ரஷ்யாவில் நடைபெற்ற உலக இளைஞர் மற்றும் மாணவர் விழாவிற்காக அனுப்பப்பட்ட குழுவை அவர் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
சுயதொழில் செய்பவர்களின் தலைவர் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, புறக்கோட்டை பிரதான வீதிகளில் வர்த்தகர்களிடம் கப்பம் வசூலித்து வந்துள்ளார்.
பாதாள உலகக்குழுவுடன் நெருங்கிய தொடர்பு
மேலும் குறித்த காலகட்டத்தில், அவர் நாமல் ராஜபக்சவின் நீலப்படை அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளார்.

அந்தத் தொடர்புகள் காரணமாகவே உலக இளைஞர் மற்றும் மாணவர் விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு மஹிந்த கஹந்தகமகேக்கு வழங்கப்பட்டிருந்தது.
ஐஸ் போதைப்பொருளுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சமூக ஊடகங்களில் காணொளிகள் சிலவும் வெளியாகியுள்ளது.
அந்த காணொளி மூலம், நாட்டில் இருந்து தப்பியோடிச் சென்றுள்ள பாதாள உலகத் தலைவர்களுடன் சந்தேக நபர் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
பாதாள உலகத் தலைவர்கள் மகிந்த கஹந்தகமகேயை டெடா என்ற பெயரிலேயே அழைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri