நாட்டில் தட்டுப்பாடாகவுள்ள புற்றுநோய் மருந்துகள் குறித்து தகவல்
நாட்டில் தட்டுப்பாடாகவுள்ள புற்றுநோய்க்கான 43 வகையான மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்றைய தினம் ( 08.02.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள இந்த மருந்துப் பொருட்களை சுங்கப் பிரிவினர் தற்போது சோதனைக்குட்படுத்தி வருவதாக சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
140 வகையான மருந்துப் பொருட்கள்
குறித்த மருந்துப் பொருட்களை எதிர்வரும் நாட்களில் வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதனிடையே, நாட்டில் தட்டுப்பாடாகவுள்ள ஏனைய 140 வகையான மருந்துப் பொருட்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவற்றை இறக்குமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
