மார்பகப் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த முடியும்: வைத்திய நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ
மார்பகப் புற்றுநோய் வருவதை தடுக்க முடியாவிட்டாலும் அதனை ஆரம்பத்திலேயே கண்டறிவதால் முழுமையாக சுகப்படுத்த முடியுமென தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் வைத்திய நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும், மார்பகப் புற்றுநோயாளர்களை கண்டறிவதற்காக சந்தர்ப்பங்களை அதிகரிக்கும் வகையில் சுக வனிதையர் மற்றும் புற்றுநோயினை ஆரம்பத்திலேயே அறிந்துகொள்வதற்காக நிறுவப்பட்டிருக்கும் நிலையகளுக்கு மேலதிகமாக நாடாளாவிய ரீதியிலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் உள்ள சத்திரசிகிச்சை நிபுணர்களின் கீழ் 30 புற்றுநோய் சிகிச்சை நிலையங்களை புதிதாக ஆரம்பிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்படும் "101 கலந்துரையாடல்" நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பெண்களுக்காக நோய்
இந்நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த வைத்திய நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ,
"உலகிலும் இலங்கையிலும் பெண்களுக்கே அதிகளவில் மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது. அதனால் ஆண்களுக்கு அந்த நோய் தொற்றாது என்று கருதக்கூடாதெனவும், இருப்பினும் ஒப்பீட்டளவில் பெண்களுக்கே நோய் ஏற்படுவதற்கான அதிக சாத்தியங்கள் உள்ளன.
ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களே 80 சதவீதம் மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனர் என்பதோடு, குடும்ப வழியில் எவருக்கேனும் புற்றுநோய் இருத்தலும் இதற்கான ஒரு சாதகமாக காணப்படுவதோடு, மரபணு திரிபுகளும் 15 சதவீத சாதகம் என்று குறிப்பிடலாம்” என தெரிவித்துள்ளார்.