இரு மாதங்களுக்கு முன்பே விடுதலையான அர்ஜுன் அலோசியஸ் : வெளியான தகவல்
டபிள்யூ.எம். மெண்டிஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் இயக்குநர் அர்ஜுன் அலோசியஸ் (Arjun Aloysius) மற்றும் மேலும் இருவர், இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்கள் சனிக்கிழமை வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக சிறைச்சாலைப் பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்தார்.
மூவருக்கும் ஆறு மாத சிறைத்தண்டனை
இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில், 3.5 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள VAT வரியை செலுத்தத் தவறியதற்காக கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தால் மூவருக்கும் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிறைச்சாலைக்குள் அவர்களின் நடத்தை மற்றும் பணித் திட்டங்களில் தீவிரமாக பங்கேற்பதன் அடிப்படையில் கைதிகள் புள்ளிகளைப் பெறலாம் என்று செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இந்தப் புள்ளிகள் அவர்களின் தண்டனையை மூன்றில் ஒரு பங்கை குறைக்க உதவுகின்றன.
3/1 நன்னடத்தை விதி
இதன் விளைவாக, அர்ஜுன் அலோசியஸும் மற்றவர்களும் இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே விடுவிக்கப்பட்டனர்.
இருப்பினும், சிறைச்சாலைப் பணித் திட்டங்களில் நன்னடத்தை மற்றும் பங்கேற்பதன் மூலம் கைதிகள் தங்கள் தண்டனைகளைக் குறைக்க அனுமதிக்கும் 3/1 நன்னடத்தை விதி, நிலையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும், ஆயுள் தண்டனை அனுபவிப்பவர்களுக்குப் பொருந்தாது என்று செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |