தேசபந்து தென்னகோன் விவகாரம்! பொலிஸ் தரப்பு விடுத்துள்ள எச்சரிக்கை
முன்னாள் பொலிஸ் மா அதிபரை கைது செய்ய தற்போது பல குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
தேசபந்து தென்னகோன் அரசியல் அதிகாரத்தின் பாதுகாப்பின் கீழ் நாட்டிலிருந்து நாடு கடத்தப்படலாம் அல்லது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று சமூக ஊடகங்களில் பல்வேறு சர்ச்சை கருத்துக்கள் வெளிவருகின்றன.
இந்நிலையில், அவ்வாறு இடம்பெற்றால், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தப்பிச் செல்லும் சந்தேக நபர்களைப் போலவே தேசபந்து தென்னகோனும் கைது செய்யப்படுவார் என்றும் புத்திக மனதுங்க கூறியுள்ளார்.
புத்திக மனதுங்க
மேலும், தேசபந்து தென்னகோனுக்கு மறைந்துக்கொள்ள எவரேனும் உதவினால், அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புத்திக மனதுங்க கூறியுள்ளார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பெப்ரவரி 28 அன்று பிடியானை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இதுவரை அவர், தொடர்பாக எந்தத் தகவலும் பொலிஸாருக்கு கிடைக்காத நிலை காணப்படுகின்றது.
இதற்கிடையில், பொலிஸ் மா அதிபர் கைது செய்வதை பாதுகாப்பு தரப்பின் முக்கிய பதவி நிலைகளில் உள்ளவர்களும் தற்போதைய அரசாங்கமும் வேண்டுமென்றே தவிர்த்து வருவதாக சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுகள் வலுத்துள்ளன.
எனினும், அவரது கைது மூலம், தேசபந்து தென்னகோனுடன் தொடர்புடைய கடுமையான குற்றங்கள் நீதிமன்றத்தின் முன் வெளிவரலாம்என்று வெகுஜன ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதன் விளைவாக, தேசபந்து தென்னகோன் அரசியல் பாதுகாப்பின் கீழ் மறைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் பல குற்றங்களுக்கு வழிவகுத்த அரசியல் அதிகாரம் பாதுகாக்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |