இலங்கை வரலாற்றில் அதிகபட்ச பணவீக்கம் பதிவானது
இலங்கையின் பணவீக்கம் மேலும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையின் வரலாற்றில் அதிகபட்ச பணவீக்க விகிதம் 2022 செப்டம்பர் மாதம் பதிவாகியுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தை விட பணவீக்கம் அதிகரிப்பு
தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டில் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் முதன்மைப் பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 69.8% ஆக பதிவாகியுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 64.3 வீதமாக பதிவாகியிருந்தது.
இதேவேளை, ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 5.5வீத அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.
இதேவேளை உணவுப் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 93.7 வீதமாக இருந்த நிலையில் செப்டம்பரில் அது 94.9 வீதமாக உயர்ந்துள்ளது. உணவில்லாப் பொருட்களின் பணவீக்கம், 50.2 வீதத்தில் இருந்து 57.6 வீதமாக உயர்ந்துள்ளது.