2021 செப்டம்பரில் பணவீக்கம் வீழ்ச்சி! - மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 ஆகஸ்டில் 6.7 சதவீதத்திலிருந்து 2021 செப்டம்பரில் 6.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.
இவ்வீழ்ச்சிக்கு 2020 செப்டம்பரில் நிலவிய உயர் தள புள்ளிவிபரத் தாக்கம் முழுமையாகக் காரணமாக அமைந்தது.
அதேவேளை, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஆகஸ்டில் 11.1 சதவீதத்திலிருந்து 2021 செப்டம்பரில் 10.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021செப்டம்பரில் 3.0 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது.
ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண், 2021 செப்டம்பரில் 5.5 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது.
முழுமையான அறிக்கையை பார்வையிட இங்கே அழுத்தவும்.......
பிக்பாஸ் 9 நிகழ்ச்சி முடிந்த கையோடு போட்டியாளர்கள் எங்கே சென்றுள்ளார்கள் பாருங்க... போட்டோ இதோ Cineulagam