இந்தியாவில் பரவும் கறுப்பு பூஞ்சை தொற்றாளர் அம்பாறையில் கண்டுபிடிப்பு
இந்தியாவில் பரவி வரும் கறுப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கு உள்ளான நபர் ஒருவர அம்பாறை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த பூஞ்சை ஊடாக நோய் அதிகரித்தல் மற்றும் மரணங்கள் அதிகரிக்க காரணமாக அமையலாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக சந்திப்பில் நேற்று கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்டுள்ள மருத்துவர் பிரசாத் கொழம்பகே தெரிவித்துள்ளார்.
இந்த கறுப்பு பூஞ்சை கோவிட் வைரசுடன் எந்த விதத்தில் சம்பந்தப்பட்டுள்ளது என்பதை ஆராய்ச்சி செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் மிகவும் பயங்கரமானவை. பூஞ்சை ஊடாக நோயின் நிலைமை அதிகரிக்கவும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் காரணமாக அமைந்துள்ளது.
கோவிட் வைரசுடன் இது எப்படி சம்பந்தப்பட்டுள்ளது என்பதை இந்திய மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அம்பாறை பிரதேசத்தில் இந்த பூஞ்சை நோய் எப்படி சென்றது என்பது இன்னும் கேள்விக்குறியதாக உள்ளது எனவும் பிரசாத் கொழம்பகே குறிப்பிட்டுள்ளார்.