காலிமுகத்திடலில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான சோதனையில் ஒன்பது பேருக்கு தொற்று!
கொழும்பில் காலிமுகத்திடலில் இன்று மேற்கொள்ளப்பட்ட எழுமாறான என்டிஜென் சோதனைகளின் போது ஒன்பது கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர்.
காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
இதேபோன்று பொது இடங்களில் அதிகாரிகள் தொடர்ந்து என்டிஜென் சோதனைகளை மேற்கொள்வார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், நேற்று மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுபவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட என்டிஜென் சோதனைகள் மூலம் மேலும் 13 தொற்றாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி கடந்த டிசம்பர் 18 முதல் நேற்று வரை மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறுவோர் மத்தியில் இருந்து மொத்தம் 74 பேர் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோர் மத்தியில் மேற்கொள்ளப்படும் என்டிஜன் எழுமாறான சோதனைகள் ஜனவரி 5ம் திகதி வரை தொடரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri