நடுவானில் திடீரென பயணிகளுடன் காணாமல்போன இந்தோனேசிய விமானம்
இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற ATR 42-500 விமானம் காணாமல்போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காணாமல்போன விமானம் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வளத்துறை அமைச்சகத்திற்கு சொந்தமானது என்று நம்பப்படுகிறது.
தேடுதல் நடவடிக்கைகள் தீவிரம்
மக்காசர் நகருக்கு அருகே விமானம் காணாமல்போயுள்ளதாகவும், அருகிலுள்ள மலைப்பகுதியில் சிதறிக்கிடக்கும் விமானத்தின் இடிபாடுகளைக் காட்டும் காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருவதாகவும் ஊடக அறிக்கையான்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாசரில் உள்ள சுல்தான் ஹசனூதின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க சில நிமிடங்களே இருந்த நிலையில், பிற்பகல் 1:17 அளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இந்த விமானம் இழந்தது.
மகாசர் விமான நிலையத்திற்கு வடகிழக்கே சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில் உள்ள லியாங்-லியாங் மலைப்பகுதியில் விமானம் மாயமாகியுள்ளது.
இந்த விபத்து நடந்த நேரத்தில் விமானக்குழுவினர் மற்றும் பயணிகள் உட்பட 11 பேர் விமானத்தில் இருந்ததை இந்தோனேசிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மக்காசர் மற்றும் மரோஸ் மாவட்டங்களின் லியாங்-லியாங் பகுதியில் இந்தோனேசியாவின் தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகவரகம் மற்றும் பொலிஸார் இணைந்து மாயமான விமானத்தைத் தேடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri