சாம்பலும் புகையுமாக காட்சியளிக்கும் இந்தோனேஷியா - ஏற்பட்ட அனர்த்தம் (VIDEO)
இந்தோனேஷியா – ஜாவா தீவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள செமெரு (Semeru) எரிமலை வெடித்துள்ளது.
இச் சம்பவம் நேற்று (4) இடம்பெற்றுள்ளது.
எரிமலையில் இருந்து பெருமளவு புகை வௌியேறுவதுடன், அருகிலுள்ள கிராமங்களில் புகைமண்டலம் சூழ்ந்துள்ளது.
இந் நிலையில் புகை 15,000 மீட்டருக்கு மேல் நோக்கி பரவக்கூடும் என்பதால், விமான சேவைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செமெரு மலையை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள், சாம்பலும் புகையும் சூழ்ந்துள்ள பகுதியிலிருந்து வௌியேறி வரும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.
எரிமலை வெடிப்பினால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளிவரவில்லை.
கடல் மட்டத்தில் இருந்து 3,676 மீட்டர் உயரத்திலுள்ள செமெரு எரிமலை கடந்த ஜனவரி மாதத்திலும் வெடித்துச் சிதறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri