இலங்கையுடன் இராணுவ பயிற்சியை மேற்கொள்ள ஆர்வம் காட்டும் இந்தோனேசியா
இந்தோனேசியாவும் இலங்கையும் இராணுவப் பயிற்சி, மூலோபாய கூட்டாண்மை மற்றும் பாதுகாப்பு முன்முயற்சிகள் உள்ளிட்ட பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதித்துள்ளன.
இந்தோனேசியத் தூதுவர் Dewi Gustina Tobing, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவை, கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுர, பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் நேற்று மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இதன்போது இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பில் நெருக்கமான உறவுகளை வளர்ப்பதற்கு இந்தோனேசியா அரசாங்கம் ஆர்வத்துடன் இருப்பதாக தூதுவர் தெரிவித்தார்.
இந்தநிலையில் இராணுவப் பயிற்சி, மூலோபாய பங்காளித்துவம் மற்றும் பாதுகாப்பு முயற்சிகள் உள்ளிட்ட பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri