மைத்திரியின் இரகசிய நகர்வுகளால் அதிர்வை ஏற்படுத்தப் போகும் கைதுகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாட்சியங்கள் வழங்கினால் அதன் அடிப்படையில் பலர் கைது செய்யப்படுவார்கள் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில் தற்போது வரை தாக்குதல் நடத்த காரணமாக இருந்த பிரதான சூத்திரதாரி கைதுசெய்யப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்த விடயம் 2019ஆம் ஆண்டே தெரிந்திருந்து அதை வெளிப்படுத்த தவறி இருந்தால் அவர் தற்போது உடனடியாக கைது செய்யப்பட்டிருப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,