இரவு விடுதியில் மோதல், 19 பேர் பலி! இந்தோனேசியாவில் துயரம்
இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா மாகாணத்தில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட சண்டை மற்றும் தீ விபத்தில் குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது
முன்னதாக குறித்த இரவு விடுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின்போது ஒருவர் குத்திக்கொல்லப்பட்டார்.
இதனையடுத்தே தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. கத்திகள் மற்றும் அம்புகளுடன் ஆயுதம் ஏந்திய இரண்டு போட்டி குழுக்களிடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
இந்தோனசியாவின் நகரங்களில் இளைஞர்களிடையே சண்டைகள் இயல்பானவை,
எனினும் அது பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது, இதுவே முதல்முறையாகும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த பிறகு, இரவு விடுதியின் மேல் மாடி அறை ஒன்றில் 18 உடலங்களை கண்டுபிடித்தனர்.

பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam