வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பதவியேற்றார்..
வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இந்திக்க கப்பு கொட்டுவ மதத் தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் கடமைகளைப் பொறுப்பேற்றள்ளார்.
வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக செயற்பட்டு வந்த சாமந்த விஜயசேகர மேல் மாகாணத்தின் தெற்கு பிரிவுக்கு பொறுப்பாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதி பொலிஸ் மா அதிபர்
இந்தநிலையில்,
வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபராக போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியாக
செயற்பட்டு வந்த இந்திக்க கப்பு கொட்டுவ நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் மதத்தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் இன்று(11) கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இதன்போது மதத்தலைவர்கள், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் நிலையங்களின பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

