கனடாவில் இந்திய வம்சாவளி இளைஞர் சுட்டுக்கொலை
கனடா - பிரிட்டிஷ் கொலம்பியாவில் இந்திய வம்சாவளி இளைஞரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், கடந்த சனிக்கிழமை இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
கனடா - (Abbotsford) இல் வசித்து வந்த 29 வயதுடைய ககன்தீப் என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து ஆறு கிலோமீற்றர் தொலைவில், கார் ஒன்றும் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில், இதுபோன்ற குற்றச்செயலைச் செய்துவிட்டு, அந்த குற்றச்செயலில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை தீவைத்து எரிக்கும் ஒரு கும்பல் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ககன்தீப் கொலைக்கும் அந்த கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |