கட்டுநாயக்க விமானநிலையத்தில் கடத்தல் முயற்சி! சிக்கிக்கொண்ட இந்தியர்கள்
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் ஸ்மார்ட் தொலைபேசிகளை நாட்டிற்குள் கடத்த முயன்ற இரண்டு இந்தியர்கள்; விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கிரீன் சேனல் வழியாக சுமார் 15 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கடத்த இருவரும் முயன்றனர் என்று சுங்கம் தெரிவித்துள்ளது.
இரண்டு இந்தியர்கள்
22 மற்றும் 23 வயதுடைய இரண்டு இந்தியர்களே இந்த செயற்பாட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனையின் போது, சந்தேக நபர்கள் எடுத்து வந்த 25 ஸ்மார்ட் தொலைபேசிகள் 84,000 வெளிநாட்டு சிகரெட் குச்சிகளைக் கொண்ட 420 அட்டைப்பெட்டிகள் மீட்கப்பட்டன.
குறித்த பொருட்கள் அரசுடைமைக்கப்பட்டதுடன், இருவருக்கும் அபராதமும் விதிக்கப்பட்டது.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்று சுழற்சி- அடுத்து வரும் சில நாட்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு