சிட்னியில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி பலியான இந்திய இளைஞர்
அவுஸ்திரேலியா - சிட்னியிலிருந்து குயின்ஸ்லாந்து சென்றுகொண்டிருந்த கார் ஒன்று கங்காருவுடன் மோதி விபத்துக்குள்ளானதில், இந்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில்,உயிரிழந்தவரின் சடலத்தை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தெலுங்கானாவைச் சேர்ந்த 27 வயதுடைய ராஜு சிகாட்டி என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கல்வி கற்பதற்காக அவுஸ்திரேலியா வந்த ராஜு, 2020ம் ஆண்டு Master of networking கற்கைநெறியைப் பூர்த்தி செய்து விட்டு தற்காலிக விசாவுடன் சிட்னியில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் குயின்ஸ்லாந்தின் புறநகர் பகுதியில் சிக்கிக்கொண்ட நண்பர்கள் சிலருக்கு உதவும் நோக்கில் ராஜு தனது நண்பர்களுடன் சென்றபோது, Carnarvon Highway-இல், St George அருகே கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு விபத்து இடம்பெற்றுள்ளது.
வீதியின் குறுக்காக வந்த கங்காரு ஒன்று காருடன் மோதுண்டதையடுத்து கட்டுப்பாட்டையிழந்த கார் அங்கிலிருந்த மரத்துடன் மோதியதில் ராஜு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், கங்காருவும் மரணமடைந்துள்ளது.
இதையடுத்து ராஜுவின் சடலத்தை இந்தியாவிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam
