ரயில் பாதையை நிர்மாணிக்க வரும் இந்திய தொழிலாளர்கள்
இந்திய கடன் உதவியின் கீழ் புனரமைக்கப்படவுள்ள மாஹாவோ முதல் ஓமந்தை வரையான ரயில் பாதைகளின் நிர்மாணப் பணிகளுக்காக இந்தியாவில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்கள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் புனரமைப்பு பணிகளுக்காக இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள அனைத்து உபகரணங்களுக்கும் வரிச்சலுகை வழங்கப்பட உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ரயில் பாதையின் புனரமைப்பு பணிகள் இந்திய நிறுவனம் ஒன்றின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளது. ஒரு கிலோ மீற்றர் ரயில் பாதையை நிர்மாணிக்க 23 கோடி ரூபாய் செலவாகும்.
எனினும் இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ஊழியர்களை பயன்படுத்தி புனரமைப்பு பணிகளை மேற்கொண்டால், ஏழு முதல் எட்டு கோடி ரூபா செலவில் ஒரு கிலோ மீற்றர் ரயில் பாதையை புனரமைக்க முடியும் என ரயில்வே திணைக்கள ஊழியர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
