20 ஆண்டுகளுக்கு பிறகு உலக அழகி பட்டத்தை வென்ற இந்திய பெண்
2021ம் ஆண்டுக்கான உலக அழகிப்பட்டத்தை இந்தியாவின் ஹரானாஸ் சாந்து (Harnaaz Sandhu) வென்றெடுத்துள்ளார்.
இஸ்ரேலின் எய்லாட்டில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் 21 வயதான சாந்து (Harnaaz Sandhu) வெற்றியீட்டியுள்ளார்.
இதற்கு முன்னர் கடந்த 2000ஆம் ஆண்டில் லாரா தத்தா உலக அழகி பட்டத்தை இந்தியாவிற்கு பெற்றுக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாந்துவுடன் பராகுவே மற்றும் தென் ஆபிரிக்க அழகிகள் இறுதிப் போட்டியில் போட்டியிட்டிருந்தனர்.
இன்றைய கால இளைய தலைமுறையினர் தங்களை ஏனையவர்களுடன் ஒப்பீடு செய்து கொள்வது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது எனவும் உங்களின் வாழ்க்கைக்கு நீங்களே தலைவர் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் சாந்து போட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளின் போது இளைய தலைமுறையினர் பற்றி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற மெக்ஸிக்கோவின் அன்ட்ரியா மெஸா, சாந்துவிற்கு உலக அழகி கீரிடத்தை அணிவித்தார்.
ஹார்னாஸ் சாந்து பஞ்சாப் மாநில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.