பிரித்தானியாவிற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள இந்திய மாறுபாடு! - கட்டுப்பாடுகளை நீக்குவதில் சிக்கல்?
பிரித்தானியாவில் கோவிட் கட்டுப்பாடுகளை முழுமையாக முடிவுக்கு கொண்டுவருதில் தாமதம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கோவிட் அச்சுறுத்தல் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21ம் திகதி முடிவுக்கு கொண்டுவர அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எனினும், கட்டுப்பாடுகளை முழுமையாக முடிவுக்குகொண்டுவருவதில் தாமதம் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கோவிட் பெரும் தொற்று காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 44 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன. இதனால் அங்கு நோய் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
அத்துடன், கோவிட் கட்டுப்பாடுகளும் கட்டம் கட்டமாக நீக்கப்பட்டது வந்ததுடன், எதிர்வரும் 21ம் திகதி கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தற்போது உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக கோவிட் தொற்றின் இந்திய மாறுபாடு மாறியுள்ளது. பிரித்தானியாவிலும், இந்திய மாறுபாடினால் பாதிக்கப்பட்ட பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், மக்கள் பொது இடங்களில், கடற்கரைகளில், பூங்காக்களில் அதிகளவில் கூடிவருகின்றனர்.
இந்நிலையில், கோவிட் கட்டுப்பாடுகளில் கடைசி கட்ட தளர்வுகளை கொண்டு வருவதற்கு தாமதம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பரவி வரும் உருமாறிய கோவிட் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயல்திறன் எந்த அளவு உள்ளது என்பதை ஆய்வு செய்ய பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளது.
எனவே கோவிட் அலை முற்றிலும் ஓய்வதற்கு முன்பாக கட்டுப்பாடுகளை முழுவதுமாக தளர்த்தினால், இதுவரை மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் விணாகி விடக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால் கோவிட் கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர தாமதம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.